8 வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு – குற்றவாளிக்கு ஆயுள் தண்டணை

8 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டணை மற்றும் கடுங்காவல் தண்டனை  விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார். சென்னை கோவிலம்பாக்கம், சுண்ணாம்பு கொளத்தூரை சேர்ந்தவர்…

8 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டணை மற்றும் கடுங்காவல் தண்டனை  விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார்.

சென்னை கோவிலம்பாக்கம், சுண்ணாம்பு கொளத்தூரை சேர்ந்தவர் 32 வயதான பிரசாந்த் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, அதே பகுதியை சேர்ந்த அவரின் நண்பரின் 8 வயது மகள் வீட்டில் தனியாக இருந்த போது அவரை தாக்கி, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர், புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் இன்று நீதிமன்ற விசாரணை நிறைவடைந்த நிலையில் குற்றவாளிக்கு நான்கு பிரிவுகளில் ஆயுள் தண்டனையும், 18ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 41 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும், 3.9ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார். மேலும்,பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் 7லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.