மன்னார்குடி அருகே பள்ளி இறுதி வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உரிய சாதி சான்றிதழ் கிடைக்காததால் உயர் கல்வியில் சேர வழியின்றி பன்றி மேய்க்க செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் நொட்சியூர் கிராமத்தில் “இந்து மலைக்குறவர்” சமூகத்தை சேர்ந்த 38 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். உரிய சாதி சான்றிதழ் வழங்கப்படாததால். அவர்களின் குழந்தைகள் பள்ளி இறுதி வகுப்பு முடித்தும் உயர் கல்வி பெறமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சாதி சான்றிதழ் கேட்டு மன்னார்குடி வருவாய் கோட்டாசியர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு செல்லும்போது வேறு சமூகத்தினர் பெயரில் சாதி சான்றிதழ் வாங்கிக்கொள்ளும்படி அதிகாரிகள் வற்புறுத்துவதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்து மலை குறவர் எனும் தங்கள் சாதியின் பெயரிலேயே சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். சாதி சான்றிதழ் கிடைக்காததால், பன்றி மேய்க்கச் செல்வதாகவும் மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.