சென்னை ஐஐடியில் தீவிரமடையும் கொரோனா

சென்னை ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்பட்டு, மாஸ்க் அணிவது கட்டாயமில்லை…

சென்னை ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்பட்டு, மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டிருந்து. ஆனால் தற்போது ஆங்காங்கே கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருவதால் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது.

சென்னை ஐஐடியில் சில தினங்களுக்கு முன்பு 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 18 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 9 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12ஆக ஆனது.

இதனை தொடர்ந்து 666 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், ஒரு பணியாளர் உட்பட 29 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஐஐடி வளாகத்தில் இன்று ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.