ரெட்மி நோட் 11 SE ஸ்மார்ட்போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரியுடன் வருகிறது.
ரெட்மி நோட் 11 SE இல் உள்ள மற்ற அம்சங்களில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், IP-53 தூசி மற்றும் நீர் புகா வண்ணம் பாதுகாப்பு ஆகிய சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போனாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் போன் இந்தியாவில் ரூ.13,499 க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 6ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பகம் உள்ளது. ஸ்மார்ட்போன் வெள்ளை, கருப்பு, ஊதா மற்றும் நீலம் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
ஆகஸ்ட் 31 ஆம் தேதி மதியம் 12PM முதல் விற்பனைக்கு வரவுள்ளது. Xiaomi இன் வலைத்தளமான mi.com மற்றும் Flipkart இல் விற்பனை செய்யப்படும்.
6.43-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் 60Hz புதுப்பிப்பு வீதம், 1,100 nits உச்ச பிரகாசம், DCI-P3 வண்ண வரம்பு, 2400 x 1080 தெளிவுத்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. MediaTek Helio G95 சிப் மூலம் இயக்கப்படுகிறது.
கேமரா
64 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் ஷூட்டர், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் கொண்ட குவாட் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. முன்புற கேமரா, 13 மெகாபிக்சல் செல்ஃபி ஸ்னாப்பருடன் வருகிறது.
மொத்தத்தில் இளைஞர்களை இந்தப் போன் அதிகம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.








