ரஞ்சி கோப்பை தொடருக்கான தமிழக அணியை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் கிரிக்கெட் விளையாட்டு வீரர் நடராஜன் இடம்பெறவில்லை.
ஜனவரி மாதம் 13 ஆம் தேதி ரஞ்சி கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. இந்நிலையில், அனைத்து மாநில கிரிக்கெட் வாரியமும் தங்களது அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு அணி இறுதி போட்டி வரை முன்னேறியது. 2016 ஆண்டுக்கு பிறகு அனைத்து ரஞ்சி தொடரில் தமிழ்நாடு அணி குரூப் சுற்றிலேயே வெளியேறியது என்பது குறிப்பிடதக்கது.
தற்போது நடக்கவுள்ள ரஞ்சி கோப்பை தொடருக்கான தமிழ்நாடு அணியில் விளையாடப் போகும் வீரர்களின் பட்டியலில், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், பி. இந்திரஜித், பி.அபராஜீத், என். ஜெகதீசன், எம். ஷாருக் கான், பி. சாய் சுதர்சன், வி. கங்கா ஸ்ரீதர் ராஜூ, சந்தீப் வாரியர், அம். முகமது, ஆர். சிலம்பரசன், பி. சரவணகுமார், ஏ. அஸ்வின் கிறிஸ்ட், எல். விக்னேஷ், ஆர், சாய் கிஷோர், எம். சித்தார்த், ஆர். கவின் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்த அணியின் தலைவராக விஜய் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனின் பெயர் இடம் பெறவில்லை, அதற்கு அவர் உடற்தகுதி இல்லாதது காரணம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ரஞ்சி போட்டியில் தமிழ்நாடு தனது முதல் ஆட்டத்தை ஜம்மு காஷ்மீருடன் மோதுகிறது குறிப்பிடத்தக்கது.







