முக்கியச் செய்திகள் தமிழகம்

சையத் முஷ்டாக் அலி கோப்பை: தமிழ்நாடு அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டன்

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி-20 தொடருக்கு தமிழ்நாடு அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி 20 தொடரில், தமிழ்நாட்டின் சார்பாக விளையாடும் அணியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மாநில மூத்த தேர்வுக் குழு நேற்று தேர்வு செய்தது. இதில் தமிழ்நாடு அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

துணைக்கேப்டனாக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் செயல்பட உள்ளார். இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் டி நடராஜன், அபராஜித், என். ஜெகதீசன், ஷாருக் கான் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களும் இடம்பபெற்றுள்ளனர். தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சாய் சுதர்சன், சரவணகுமார் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்:

தினேஷ் கார்த்திக் (கேப்டன்), விஜய் சங்கர் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், டி நடரா ஜன், சந்தீப் எஸ் வாரியர், ஆர் சாய் கிஷோர், அபராஜித், என் ஜெகதீசன், எம் அஷ்வின், ஷாருக் கான், ஹரி நிஷாந்த், எம் சித்தார்த், கங்கா ஸ்ரீதர் ராஜு, எம் முகமது, ஜே கவுசிக், ஆர். சஞ்சய் யாதவ், ஆர் சிலம்பரசன், ஆர் விவேக் ராஜ், பி சாய் சுதர்ஷன், பி சரவண குமார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சு – ஆ.ராசாவுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

Web Editor

ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது!

G SaravanaKumar

CSK ரசிகரின் நடன அசைவுகளை பின்பற்றும் சியர்லீடர்கள் -இணையத்தில் வைரலாகும் wholesome video!…

Web Editor