முக்கியச் செய்திகள் உலகம் தொழில்நுட்பம்

உலகின் முதல் ரோபோ நீதிபதி!

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் உலகிற்கே மிகக் கடுமையான போட்டியாக விளங்கும் சீனா தற்போது செயற்கை நுண்ணறிவை கொண்ட ஒரு ரோபோ நீதிபதியை உருவக்கியுள்ளது.

உலகிலேயே முதன் முறையாக செயற்கை நுண்ணறிவை கொண்டு ஒரு ரோபோ நீதிபதியை சீனா உருவாக்கியுள்ளது. இந்த ரோபோ நீதிபதி வழக்கு விசாரணைகளை கேட்டறிந்து 97 சதவீதம் துல்லியமான தீர்ப்புகளை வழங்கும் என அதன் வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த ரோபோ நீதிபதி, நீதிமன்றத்தில் வாதாடப்படும் வாதங்களை கேட்டு தீர்ப்புகளைத் தரும் வல்லமை படைத்தது எனக் கூறப்படுகிறது. அந்த வகையில், கிரெடிட் கார்ட் மோசடி, திருட்டு மற்றும் விபத்து போன்ற வழக்குகளை இதனால் கையாளமுடியும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது. இதனால், வழக்கறிஞர்களின் பணிச்சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2015-ல் இருந்து 2020-ஆம் ஆண்டு வரை பதிவாகியுள்ள வழக்குகளின் தரவுகளை இந்த ரோபோவிற்கு பதிவேற்றப்பட்டிருக்கிறது.

என்னதான் இந்த ரோபோ நீதிபதி ஒரு அருமையான படைப்பு என்றாலும், மக்கள் மத்தியிலும் பிற வழக்கறிஞர்கள் மத்தியிலும் இது பெரிதளவில் நம்பிக்கையை ஈட்டவில்லை. மேலும், இந்த ரோபோவால், வழக்குகளை கேட்டு தவறுகளை கண்டறிய முடிந்தாலும், இதனால் சரியான தீர்ப்பை வழங்க முடியாது எனவும், அவ்வாறு ஒரு நிலை வந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? அந்த இயந்திரமா அல்லது அதனை வடிவமைத்தவர்களா என்ற கேள்வியையும் வழக்கறிஞர்கள் தரப்பிலிருந்து முன்வைக்கின்றனர். எதுவாக இருப்பினும், சீனாவின் இந்த படைப்பைக் கண்டு உலக நாடுகள் அனைத்தும் வியப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘டிக்கெட் எடுங்க’- பெண்ணை இறக்கிவிட்ட நடத்துநர்

G SaravanaKumar

சேலத்தில் 10 வயது சிறுமியை விற்பனை செய்த தாய், தந்தை கைது!

G SaravanaKumar

தமிழ்நாட்டில் புதிதாக 8,183 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Gayathri Venkatesan