முக்கியச் செய்திகள் தமிழகம்

ராணிப்பேட்டையில் குரோமிய கழிவுகளை அகற்ற முதற்கட்டமாக 12 கோடி நிதி ஒதுக்கீடு

ராணிப்பேட்டையில் குரோமிய கழிவுகளை அகற்ற முதற்கட்டமாக 12 கோடி நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவையின் மனுக்கள் குழு தலைவர்
கோ.வி.செழியன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று தமிழ்நாடு
சட்டப்பேரவை மனுக்கள் குழு ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் அளித்த மனுக்களுக்கு அந்தந்த துறை அலுவலர்கள் முன்னிலையில் விசாரணை செய்து தீர்வு காணும் வகையில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக சிப்காட் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மூடப்பட்ட தமிழ்நாடு குரோமேட் கெமிக்கல் நிறுவனத்தில் தேங்கியுள்ள கழிவுகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அதனை தொடர்ந்து நெமிலி வட்டத்திற்கு உட்பட்ட மேலப்புலம் பகுதியில் பழுதடைந்துள்ள 1,00,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நீர் தேக்கத் தொட்டியினையும், துணை சுகாதார நிலையத்தை ஆய்வு செய்ததோடு, ஆற்காடு வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைப்பது மற்றும் புதுபாடி பாலாறு அணைகட்டில் நீர்த்தேக்க அணையாகவும், ஆற்றின் இரு கரையும் இணைக்கும் தார் சாலை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழு தலைவர்  கோ.வி.செழியன், ராணிப்பேட்டை மாவட்டத்தின் பிரதான பிரச்சினையாக உள்ள குரோமிய கழிவுகளை அகற்றவும், அதனை பாதுகாக்கவும் முதற்கட்டமாக 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் அந்த துறையின் அதிகாரிகள் மூலம் முழு கள ஆய்வு செய்யப்பட்டு முழு அறிக்கையை எங்களிடம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கூறி இருப்பதாக தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாநில கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி,ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், உட்பட துறை சார்ந்த  அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram