ஆஸ்கர் விருதை வென்ற RRR, தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படங்களின் குழுக்களுக்கு மாநிலங்களவை கூட்டத் தொடரில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை தொடர்ந்து நடைபெற்றது. அப்போது, ஆஸ்கர் விருதுகளை வென்ற ஆர்ஆர்ஆர் மற்றும் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் ஆகிய இரு படங்களின் குழுக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: பிரதமர் மோடியை பிரபல ரவுடி வரவேற்ற நிகழ்வு – விமர்சித்த காங்கிரஸ்
வாழ்த்து தெரிவித்து மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேசுகையில், “ஆஸ்கர் விருதை வென்ற ஆர்ஆர்ஆர் மற்றும் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறார்கள். இந்த அங்கீகாரம் இந்திய கலைஞர்களின் பரந்துபட்ட திறமை, மகத்தான படைப்பாற்றல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்த சாதனைகள் மூலம் உலகளாவிய பாராட்டைப் பிரதிபலிக்கின்றன. நமது உலகளாவிய எழுச்சி மற்றும் அங்கீகாரத்துக்கான மற்றொரு அம்சம் இது.” என்று தெரிவித்தார்.
-ம.பவித்ரா







