கடலூர் துறைமுகத்தில் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8 பைபர் படகுகள் மர்மமான முறையில் எரிந்து சேதம் அடைந்தன.
கடலூர் துறைமுகம் அருகே பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ள நிலையில் மீனவர்கள் அக்கரைக்கோரி உப்பனாற்றம் கரையோரம் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைப்பது வழக்கம், இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் திடீரென மர்மமான முறையில் தீப்பிடித்து எறிந்தன.
உடனே அருகில் இருந்த மீனவர்கள் தீயையணைத்த நிலையில் ஆறுபடகுகள் முழுவதுமாகவும், இரண்டு படகுகள் ஒரு பகுதியும் சேதமானது. இதனை அடுத்து, வந்த கடலூர் துறைமுக போலீசாா் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் முன்விரோதம் காரணமாக படகுகளுக்கு தீ வைக்கப்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-ரூபி







