கர்நாடகாவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடியை அம்மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி `ஃபைட்டர் ரவி’ வரவேற்றதால் சர்ச்சையாகியுள்ளது.
பெங்களூரு – மைசூரு இடையேயான 10 வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மாண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகாவில் உள்ள கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அந்த சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விழாவுக்கு பிரதமர் மோடி வரும் வகையில் மாண்டியா அருகே பிஇஎஸ் கல்லூரியில் ஹெலிபேட் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு பிரதமர் மோடி வந்திறங்கினார். இதையடுத்து பிரதமர் மோடியை வரவேற்க பசவராஜ் பொம்மை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரவேற்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
பெங்களூர் ரவுடி பட்டியலில் உள்ள `ஃபைட்டர்’ ரவி பிரதமர் மோடியை வரவேற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. பைட்டர் ரவி பிரதமர் மோடியை கையெடுத்து கும்பிடும் நிலையில் மோடியும் பரஸ்பரம் கையெடுத்து கும்பிட்டுள்ளார். இருவரும் பரஸ்பரம் கையெடுத்து கும்பிடும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
அண்மைச் செய்தி : உலகில் மிகவும் மாசடைந்த நாடுகள் பட்டியல்: 8வது இடத்தில் இந்தியா
இந்த புகைப்படத்தை பகிர்ந்து காங்கிர்ஸ் கட்சி இந்த சம்பவத்தை விமர்சித்துள்ளது. ரவுடிக்கு முன்பு பிரதமர் கைகூப்பி நிற்கிறார். இது பிரதமர் பதவிக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக ஃபைட்டர் ரவி கூறுகையில், “பிரதமர் மோடியை வரவேற்க பாஜக வாய்ப்பளித்ததை வாழ்வின் பெருமையாக தருணமாக நினைக்கிறேன். என் மீதான வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் எனது பெயரை கெடுக்க சில முயற்சித்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.