சென்னை விமான நிலையத்தில் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஜெய்லர் படப்பிடிப்பு கலந்து கொண்டு ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு ரஜினிகாந்த் திரும்பினார்.
ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடிப்பதாககடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்கிய ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு 60% அளவிற்கு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.மேலும் படப்பிடிப்பிற்காக கடந்த ஏழாம் தேதி ஹைதராபாத் புறப்பட்ட ரஜினி படப்பிடிப்பில் இருந்து இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்.







