முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

கன்னியாகுமரி மீனவர்களின் படகு மீது லைபீரியா சரக்கு கப்பல் மோதி விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த விசைப்படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்து ஏற்ப்பட்டுள்ளது. படகில்
இருந்த 14 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியை சேர்ந்தவர் டானி (38).  இவருக்கு
சொந்தமான “SEA QUEEN” என்ற விசைப்படகில்  கடந்த 12 தேதி குளச்சல் மீன்பிடித்
துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவருடன் குளச்சல், அழிக்கல்,ராமன்துறை, சின்ன முட்டம் போன்ற பகுதிகளை சேர்ந்த 6 மீனவர்களும்,
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த லவ்குஷ் மற்றும் கமலேஷ், ஒரிசாவை சேர்ந்த கேயாதர்
ஜனா, சமீர் உட்பட மொத்தம் 14 பேர் மீன்பிடிக்க சென்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

படகில் சென்ற மீனவர்கள் விசைப்படகு சுமார் 69 நாட்டிக்கல் தொலைவில் சென்ற பின் படகினை நங்கூரமிட்டு மீன்களை பிடித்தும், மீன்களை பதப்படுத்தவும் தொடங்கினர்.  அப்போது அந்த வழியாக சீனா நாட்டின் நிம்போ என்ற துறைமுகத்திலிருந்து துபாய் நாட்டின் புஜேரா -விற்கு எண்ணேய்  ஏற்றுவதற்காக சென்ற லைபீரியா நாட்டை சேர்ந்த போஸ்டன் என்ற கப்பல் விசைப்படகின் முன்பகுதியில் மோதியது.

இதனால் விசைப்படகின்  முன்பகுதி முழுவதும் இரண்டாக விரிசல் அடைந்த நிலையில்
விசைப்படகில் இருந்த மீனவர்கள் அனைவரும் விசைப்படகிலிருந்து  கீழே தடுமாறி
விழுந்துள்ளனர். பின்னர் அவர்களுக்கு சொந்தமான மற்றொரு விசைப்படகின்  உதவியுடன் கட்டி இழுத்து இன்று குளச்சல் மீன்பிடித் துறைமுகம் வந்தடைந்தனர்.

விசைப்படகின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய சம்பந்தப்பட்ட  சரக்கு கப்பல் மீது
நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து குளச்சல் கடல் காவல் நிலையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்

G SaravanaKumar

தமிழ்நாட்டில் குறையும் கொரோனா பாதிப்பு

Halley Karthik

துணிவுடன் களமிறங்கும் வாரிசு; இந்த பொங்கல் ரிலீஸில் யார் மாஸ் ?

Yuthi