முக்கியச் செய்திகள் விளையாட்டு

தோனிக்காக ஐபிஎல் கோப்பையை மீண்டும் வெல்வோம்: ரெய்னா சூளுரை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்காக, மீண்டும் ஐபிஎல் கோப்பையை வெல்வோம் என அந்த அணியின் நட்சத்திர வீரர் ரெய்னா தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய 14வது ஐபிஎல் டி20 தொடர், கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா பரவல் அச்சுறுத்தலால் எஞ்சியுள்ள தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது. அதன்படி, அக்டோபர் மாதம் ஐபிஎல் மீண்டும் தொடங்கவுள்ளது.

இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்றுள்ள சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல்-ல் சென்னை அணி, பிளேஆப் சுற்றுக்குக் கூட தகுதிபெற முடியாமல் வெளியேறியது. அந்த தொடரில் கேப்டன் தோனியின் ஆட்டத்திறனும் விமர்சினத்திற்குள்ளானது.

இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை அணியின் ஃபார்ம் ஐக்கிய அரபு அமீரகத்தில் எப்படி இருக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஐபிஎல்-ல் சென்னை அணியில் இடம்பெறாத நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, இந்த சீசனில் திரும்பியிருப்பது வலுவாக கருதப்படுகிறது. இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், மொயின் அலி, ருதுராஜ், சாம் கரன் போன்ற வீரர்கள் நல்ல பார்மில் இருப்பதால் தங்கள் அணிக்கான வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவித்தார்.

தோனி தனக்கு ஒரு அண்ணன் போன்றவர் என தெரிவித்த ரெய்னா, அவர் மீது பெரும் மதிப்பு வைத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறினார். இந்த முறை தோனிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று தருவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் ரெய்னா தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

மமதாவின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்!

Sathis Sekar

நடிகர் விஜய்-க்கு முழு உருவச் சிலை வைத்த ரசிகர்கள்

Halley karthi

கங்கை அமரனின் மனைவி காலமானார்!

Halley karthi