பவானியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையின்றி தவித்து வந்த திருநங்கை ஒருவருக்கு இளைஞர் ஒருவர் தனது கடையில் வேலை வழங்கி உள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் ஐந்து வீதியைச் சேர்ந்தவர் அருளி. தொழிற்கல்வி படித்துள்ள திருநங்கையான இவர் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் தற்காலிமாக பணியாற்றி வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் சொந்த ஊர் திரும்பிய திருநங்கை அருளி, சக திருநங்கைகளுடன் சேர்ந்து கடைகளில் பணம் வசூல் செய்யத் தொடங்கினார்.

இந்நிலையில் பவானி புதிய பேருந்து நிலையத்தில் வசூலில் ஈடுபட்டபோது செல்போன் கடை நடத்தி வரும் ஜெகதீசன் என்பவர் அருளிக்கு தனது கடையில் வேலை வழங்க முன்வந்தார்.
இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட திருநங்கை அருளி, திருநங்கைகள் மீதான தவறான பிம்பத்தை உடைப்பதற்காகவே இந்த வேலையில் சேர்ந்துள்ளதாகவும், ஜெகதீசன் போன்று மற்ற கடை உரிமையாளர்களும் திருநங்கைகளுக்கு வேலை வழங்கி உதவ வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.







