26.7 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா

உ.பியில் தேர்வானவர்களுக்கு சென்னையில் ரயில்வே பணியா? மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில், ரயில்வே பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விதிகளை மீறி சென்னையில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், உத்தர பிரதேசத்திலுள்ள கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேர், தெற்கு ரயில்வேயில் உதவி ரயில் ஓட்டுநர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஒரு ரயில்வே வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள், வேறொரு ரயில்வே வாரியத்தில் நியமிக்கப்படக்கூடாது என விதிகள் தெளிவாக இருந்தும், கோரக்பூரில் தேர்வானவர்களை சென்னையில் நியமித்தது சட்ட விரோதம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை தென் மாநில ரயில்வே விண்ணப்பதாரர்களின் வேலைவாய்ப்பை பாதிப்பதோடு, ஜனநாயக அமைப்பை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறினார்.

இந்த விவகாரத்தில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு கோரக்பூர் விண்ணப்பதாரர்களை கோரக்பூருக்கு திருப்பி அனுப்பிவிட்டு, தென் மாநில ரயில்வேயின் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை கொண்டு உதவி ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சியில் இடம் பெற்ற தமிழ்நாடு அரசின் ஊர்தி!

Jayasheeba

ஆப்கன் மசூதி குண்டுவெடிப்பு ஏன்? ஐ.எஸ்-கே பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

Halley Karthik

விபத்தில் மூளைச்சாவு; 8 பேருக்கு மறுவாழ்வு அளித்த இளைஞர்

G SaravanaKumar