தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,57,266 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 14 பேர் இன்று உயிரிழந்தனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,490 ஆக அதிகரித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1,658 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். முழுமையாக நலம் பெற்றவர்களின் எண்ணிக்கை 26,04,491 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 17,285 ஆக உள்ளது.
மாவட்டங்களைப் பொறுத்தவரை கோவையில் 196, சென்னையில் 190, செங்கல்பட்டில் 118, ஈரோட்டில் 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் 100க்கும் குறைவாகவே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.