முக்கியச் செய்திகள் தமிழகம்

தடுப்பூசி போட அரசு கட்டாயப்படுத்தினால் தவறில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி போட அரசு கட்டாயப்படுத்தினால் தவறில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். அப்போது, சீர்காழி வட்டாரத்தில் 100% தடுப்பூசி போடப்பட்ட ஊராட்சிகளுக்கு சான்றிதழையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் மாலை 4:30 மணி வரை 18.76 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது அவரிடம் கொரோனா தடுப்பூசி கட்டாயமா? கட்டாயம் இல்லையா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர், “உயிரோடு இருப்பது அவசியமா, அவசியம் இல்லையா என்ற கேள்வியை போன்று உள்ளது இது. பெருந்தொற்று பரவும் இக்கட்டான காலத்தில் உலக அளவில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்வது மட்டும்தான் தீர்வாக உள்ளது. எனவே, தடுப்பூசி போடுங்கள் என அரசு கட்டாயப்படுத்தினாலும் தவறில்லை” என தெரிவித்தார்

Advertisement:
SHARE

Related posts

2 பேரைக் கொன்ற ஒற்றை காட்டு யானை : வனத்துறை எச்சரிக்கை

Ezhilarasan

ஆந்திராவில் வீடு தேடிச் செல்லும் ரேஷன் பொருட்கள்!

Saravana

அஞ்சல் நிலையங்கள் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே செயல்படும்!

Halley karthi