அரசியல் சாசன புத்தகத்தை கையிலேந்தியவாறு எம்.பி.யாக பதவியேற்றார் ராகுல் காந்தி!

ரே பரேலி தொகுதி எம்.பி.யாக, மக்களவையில் இன்று பதவியேற்றுக் கொண்டார் ராகுல்காந்தி.  18-வது மக்களவை கூட்டத் தொடர் நேற்று (ஜூன் 24) தொடங்கியது.  முதல் நாளில் தற்காலிக சபாநாயகர் பரத்ருஹரி மஹ்தாப் தலைமையில் எம்பிக்கள்…

ரே பரேலி தொகுதி எம்.பி.யாக, மக்களவையில் இன்று பதவியேற்றுக் கொண்டார் ராகுல்காந்தி. 

18-வது மக்களவை கூட்டத் தொடர் நேற்று (ஜூன் 24) தொடங்கியது.  முதல் நாளில் தற்காலிக சபாநாயகர் பரத்ருஹரி மஹ்தாப் தலைமையில் எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இன்று இரண்டாவது நாள் கூட்டத் தொடர் நடைபெற்றது.  தொடர்ந்து இரண்டாவது நாளாக தற்காலிக சபாநாயகர் பரத்ருஹரி மஹ்தாப் தலைமையில் உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

அந்த வகையில்,  ரே பரேலி தொகுதி மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, அரசமைப்புப் புத்தகத்தை கையில் ஏந்தியபடி,  பதவியேற்றுக் கொண்டார்.  பதவியேற்றுக் கொண்ட பிறகு,  வாழ்க இந்தியா, வாழ்க அரசியல் சாசனம் என்று முழக்கமிட்டார்.

தொடர்ந்து காங்கிரஸ் தமிழக எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் தயாநிதி மாறன்,  துரை வைகோ,  கனிமொழி,  ஜோதிமணி, சசிகாந்த் செந்தில்,  உள்ளிட்ட உறுப்பினர்கள் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.