காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மேற்கொண்டு வரும், இந்திய ஒற்றுமை நடைபயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
கன்னியாகுமரியில் கடந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் ஏறத்தாழ 3 ஆயிரத்து 970 கிலோ மீட்டர் பயணம் செய்த அவர், காஷ்மீரில் இறுதிக்கட்ட பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் நடைபயணம் மேற்கொண்ட அவருக்கு, பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் பகுதியில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து ராகுல் காந்தி வீரவணக்கம் செலுத்தினார்.இந்நிலையில், இன்றுடன் அவரின் ஒற்றுமை நடைபயணம் நிறைவடைகிறது. இதற்காக
ஸ்ரீநகரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க 23 எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த கட்சிகளின் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். அத்துடன் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.