முக்கியச் செய்திகள் தமிழகம்

புதிய கல்வி கொள்கையை அறியாமையால் சிலர் எதிர்க்கின்றனர்- ஆளுநர் ஆர்.என்.ரவி

புதிய கல்விகொள்கையை அறியாமையாலும், முழுமையாக படிக்காமலும் சிலர் எதிர்த்து வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சின்மயா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியின் 50வது ஆண்டு விழா  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் சென்னை பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர், டாக்டர் எஸ்.பி.தியாகரா ஜன் மற்றும் சின்மயா வித்யாலயா பள்ளியின் இயக்குனர் ஒ.நம்பியார் மற்றும் சின்மயா மிஷன் ஆன்மீக வழிகாட்டி எச்.சுவாமி மித்ரானந்தாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பள்ளியில் சிறப்பாக பணியாற்றிய பள்ளியின் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி பரிசுகளை வழங்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து மேடையில் பேசிய ஆர்.என்.ரவி, பகவத்கீதையை போன்ற சிறந்த புத்தகம் என்னை பொருத்தவரை வேறு எதுவும் இல்லை. வாழ்க்கைக்கான அனைத்தும் பகவத் கீதையில் உள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு காலணி ஆதிக்க கல்வி முறை தொடர்ந்தது. உலகத்திற்கு ஒற்றுமையை உணர்த்த கூடிய சகோதரத்துவமும், மனிதநேயமும் பாரதத்தில் இருந்து தோன்றியது என்று கூறினார்.மேலும், பாரதத்தின் உன்னதமான பாதையை உலகத்திற்கு காட்ட, நாம்  தவறிவிட்டோம். ஆனால் தற்போது அந்நிலைமை மாறியுள்ளது. வலிமையான தலைமை உள்ளதால் சரியான முறையில் அனைத்தும் நடந்து வருகிறது. இனி நாம் நேரத்தை வீணாக்க கூடாது. அடுத்த 25 ஆண்டுகளில் உலகை மகிழ்சியான உலகமாக கொண்டு செல்லும் கடமை இந்தியாவிற்கு உள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், புதிய கல்விகொள்கை புரட்சிகரமானது. சிலர் அதை  அறியாமையால், படிக்காமல் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து வருகின்றனர். புதிய கல்விக்கொள்கையால் மட்டுமே இந்தியாவின் இலக்கை அடைய முடியும். இந்தியா முழுவதும் வளர்ந்த நாடாக வேண்டும் என்கிற இலட்சியம் கொள்ள வேண்டும். ஆங்கிலேயே ஆட்சி மகிழ்வானது என்று உயர் பதவியில் இருக்கும் சிலர் பேசுவது வேதனைக்குரியது.

ஜனநாயகத்திற்கு ஆப்ரகாம் லிங்கனை உதாரணம் காட்டுகின்றனர். அவருடைய காலத்தில் பெண்களுக்கு உரிமை இல்லை. ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக பெண்களுக்கு இந்தியா, அதிகாரமும், சுதந்திரமும் அளித்துள்ளது. நம் பாரம்பரியம் மீது பெருமை கொள்ள வேண்டும். ஆங்கிலேய காலத்தில் இருந்து பிரிவினை மேலோங்கியது. அது இனம், மதம் என தற்போதும் தொடர்கிறது. அதனை மறந்து அனைவரும் ஒன்றே என்கிற எண்ணத்துடன் வளர வேண்டும் எனவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியா – இலங்கை: 574 ரன்களை குவித்த இந்தியா.

Halley Karthik

மூத்த பத்திரிகையாளர் கைது – காவல்துறை விளக்கம்

Dinesh A

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.4,000 நிவாரணம்: மார்க்சிஸ்ட் கோரிக்கை!

EZHILARASAN D