இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நேற்றிரவு நடந்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி டிவான் கான்வேவும், பின் ஆலெனும் நியூசிலாந்தின் இன்னிங்சை தொடங்கினர். மைதானம் சுழற்பந்துக்கு ஏதுவாக இருந்ததால் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடக்க ஆட்டகாரர்களாக களம் இறங்கிய பின் ஆலென் மற்றும் கான்வே 11 ரன்களில் வெளியேறினர். சாஹல், வாஷிங்டன், குல்தீப் யாதவ், தீபக் ஹூடா என்று 4 சுழற்பந்து வீச்சாளர்களை இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தொடர்ச்சியாக பயன்படுத்தியதால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. நியூசிலாந்து வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். எந்த ஒரு பேட்ஸ்மேனும் 20 ரன்னை கூட தொடவில்லை. அதிகபட்சமாக கேப்டன் சான்ட்னெர் 19 ரன் எடுத்தார். 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய நியூசிலாந்து அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்களே எடுக்க முடிந்தது.இந்திய தரப்பில் அர்ஷ்தீப்சிங் 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர்,யுஸ்வேந்திர சாஹல், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். அடுத்து 100 ரன் தேவை என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய பேட்ஸ்மேன்களும் திண்டாடினர்.
தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மான் கில் 11 ரன்னிலும், இஷான் கிஷன் 19 ரன்னிலும், ராகுல் திரிபாதி 13 ரன்னிலும் வெளியேறினர். வழக்கமாக மின்னல் வேகத்தில் மட்டையை சுழற்றும் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவும் ரன் எடுக்க சிரமப்பட்டார்.
கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டது. இறுதி ஓவரை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிக்னெர் வீசினார். இதில் முதல் 4 பந்துகளில் 3 ரன் மட்டுமே இந்திய பேட்ஸ்மேன்கள் எடுத்ததால் டென்ஷன் மேலும் எகிறியது. ஒரு வழியாக 5-வது பந்தை சூர்யகுமார் யாதவ் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். நேற்றை ஆட்டத்தில் அவர் அடித்த ஒரே பவுண்டரி இது தான். இந்த வெற்றியின் மூலம் இந்தியா-நியூசிலாந்து அணிகள் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. 3-வது டி20 போட்டி தான், இந்த தொடரை யார் கைப்பற்றுவார்கள் என்று நிர்ணயிக்கும்.