திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்வீட் ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் அவரது கணவர் சபரீசன் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்களுக்கு சொந்தமான நான்கு இடங்களிலும் இன்று சோதனை நடந்துள்ளது. இந்த திடீர் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத்தொடர்ந்து திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கே. எஸ் . அழகிரி, திருமாவளவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம். பி ராகுல் காந்தி தனது கண்டத்தை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்ட ட்வீட்டில் பாஜக தேர்தல் தோல்விகளை கையாள வருமான வரி சோதனையை கையில் எடுத்துள்ளது’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.







