முதல் பெண் ராணுவ காவலர்களின் தரவரிசைப் பட்டியலை விரைவில் வெளியிடும் இந்திய ராணுவம்!

ராணுவத்தில் பெண் ராணுவ காவலர்களின் தரவரிசை பட்டியலைக் கூடிய விரைவில் முதல் முறையாக இந்திய ராணுவம் வெளியிட உள்ளது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவத்தில் தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் சரியான முறையில்…

ராணுவத்தில் பெண் ராணுவ காவலர்களின் தரவரிசை பட்டியலைக் கூடிய விரைவில் முதல் முறையாக இந்திய ராணுவம் வெளியிட உள்ளது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய ராணுவத்தில் தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் பெண் ராணுவ பணியாளர்களைப் பணி அமர்த்தும் போது சிறந்த பயிற்சி கட்டமைப்பை உறுதி செய்யப் பல பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் சென்னை பயிற்சி அகாடமி, அசாம் ரைபிள்ஸ் மற்றும் தேசிய கேடட் கார்ப்ஸ் போன்றவை பயிற்சியை உறுதி செய்துவருகிறது.

கடந்த 17 வருடங்களில் மட்டும் 1,700 பெண் ராணுவ காவலர்கள் இந்திய ராணுவத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர் இதில் முதன் முறையாக சிறந்த பெண் ராணுவ காவலர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட உள்ளது இந்திய ராணுவம். ராணுவத்தில் ஆண்களுக்குப் பயிற்சி எவ்வளவு அத்தியாவசியமாகப் பார்க்கப்படுகிறதோ அதே அளவு பெண் ராணுவ காவலர்களுக்கும் நடைமுறைப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.