சென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி!

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தடைந்தார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னையில் உள்ள தீவுத்திடலில் மாணவர்கள் முன்னிலையில் பேச இருக்கிறார். இதற்காக சென்னை வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய்யை அவரது நீலாங்கரையில் இல்லத்தில் சந்தித்து பேச உள்ளார்.

தொடர்ந்து சென்னை தீவுத் திடலில் நடைபெறும் ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். இதற்காக தமிழ்நாடு முழுவதும் இணையதளம் மற்றும் கியூ.ஆர். கோடு மூலம் நடத்தப்பட்ட மாணவர்கள் பதிவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 10 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.