ஆர்யாவின் 40வது படத்தை நிகில் முரளி இயக்குகிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகிய இருவரும் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி நடைபெற்றது.
இந்த படத்தை ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா ஆகிய இருவரும் தி ஷோ பீப்பிள் என நிறுவனத்தின் மூலம் தயாரித்து உள்ளார்கள். இந்தப் படத்தை நடிகர் ஆர்யா மற்றும் சில்வர் கிரெயின் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்துத் தயாரித்துள்ளனர். ‘ஹலோ காதல்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், ‘ஹலோ காதல்’ படத்தின் ‘மஜா மஜா’ எனும் பாடல் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. நீரஜ் மாதவ், விஷ்ணு எடவன் எழுதிய இப்பாடலை, நீரஜ் மாதவ் மற்றும் செம்வி இணைந்து பாடியுள்ளனர்.




