சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “சுமார் 1.5 கி மீ உயரம் வரை குமரிக்கடல் பகுதியிலிருந்து தமிழகம் மற்றும் கேரளம் வழியாக தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 24 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கரூர், தேனி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




