ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்த பேசினார். அப்போது, “இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு. அரசியல் சாசனத்திற்கு சவாலாக உள்ளது தற்போது ஆளும் மத்திய அரசு பிஜேபி, ஆர் எஸ் எஸ் அமைப்பிலிருந்து காப்பாற்றும் நிலை உள்ளது.. எவ்வளவு இடையூறு இருந்தாலும் அரசியலில் சட்டத்தை கடைப்பிடித்து வருகிறோம்.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசு கண்டித்து போராட்டம் நடைபெறும். எந்த சூழலிலும் அத்தியாவசிய பொருள் விலை உயரக்கூடாது சட்டம் இயற்ற வேண்டும் மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியான தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் உள்ள பயிர் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
திருப்பரங்குன்றம் விவகாரம் வரவேற்கிறோம். திமுக எடுத்த நிலைப்பாட்டை தவெக எடுத்துள்ளதை வரவேற்கத்தக்கது. நீதிமன்றம் தீர்ப்பு இருந்தால் கூட அமைதியை பூர்த்தி செய்ய கவனமாக இருக்க வேண்டும் என்பதை தமிழக அரசு இந்த நிலை எடுத்துள்ளது. இது இந்து மக்களுக்கு எதிரான எந்த நகரும் இல்லை. இந்த மண்ணில் ஜாதி மதம் பாகுபாடுகள் இடமில்லை.
தமிழக அரசை கலைக்க வேண்டும் என ஆளுநரிடம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மனு கொடுத்துள்ளார் என்ற கேள்விக்கு, மலிவான அரசியல், ஜனநாயகத்திற்கு எதிரான கருத்து. கள்ளக்குறிச்சி விவகாரம் ஏற்புடையதல்ல, விசாரணைக்கு முன்பு நிறுத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் பணியிடங்களில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.




