சிஸ்டம் தோல்வியடைந்து விட்டதால், மக்களின் குரல்தான் முக்கியம் என மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டையே உலுக்கியிருப்பதாகவும், மாநிலங்களுக்கு உதவ, மத்திய அரசு அனைத்து வகையில் செயல்படுவதாகவும் கூறினார். இந்நிலையில், பிரதமரின் மன் கி பாத் உரை மற்றும் கொரோனா விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை விமர்சிக்கும் வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில், சிஸ்டம் தோல்வி அடைந்துவிட்டது என்றும், மக்களின் குரல் முக்கியம் என தெரிவித்தியுள்ளார். மேலும், நெருக்கடியான காலங்களில் நாட்டிற்கு பொறுப்பான குடிமக்கள் தேவை என்றும், காங்கிரஸ் கட்சியினர் அனைத்து அரசியல் பணிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.