முக்கியச் செய்திகள் உலகம்

ஆக்சிஜன் சிலிண்டர் வெடிப்பு : 82 பேர் உயிரிழப்பு!

ஈராக், கொரோனா மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டதில் 82 பேர் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து நேற்றிரவு பயங்கர தீவிபத்து நேரிட்டது.
தொடர்ந்து நோயாளிகள் தங்கியுள்ள அறைகளிலும் மளமளவென்று தீ பரவியதால், அங்கிருந்த நோயாளிகள் வெளியேற முடியமால் பலியாகினர்.

இந்த தீ விபத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 110 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த விபத்து தொடர்பாக
ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதீமி விரிவான விசாரணை நடத்தி தக்க தண்டனை வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளை உடனடியாக கைது செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement:

Related posts

“வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”: முதல்வர் பழனிசாமி

Karthick

20 மாத குழந்தையை தந்தையே அடித்து கொன்ற கொடூரம்!

Niruban Chakkaaravarthi

‘யாருப்பா நீ..’ இந்த சிறுவனுக்கு எலும்பு கூடு மட்டும்தான் நண்பனாமாம்….!

Saravana