முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

சுசீந்திரம் பழையாற்றில் உடைப்பு : 500 வீடுகளுக்குள் வெள்ளம்!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் பழையாற்றில் உடைப்பு ஏற்பட்டதால், 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக கொட்டித்தீர்க்கும் கனமழை, சென்னை மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் மழை பாதிப்பு குறித்தும், அதற்கு மக்கள் கூறும் தீர்வு பற்றியும் நியூஸ் 7 தமிழ் பிரம்மாண்ட கள ஆய்வு மேற்கொண்டது. அதில் பொதுமக்களிடம் தீர்வு குறித்து கேள்விகேட்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் பழையாற்றில் உடைப்பு ஏற்பட்டதால், 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. பழையாற்றை தூர்வாரி, தடுப்புச் சுவர்களை அமைக்க வேண்டும் என்பதே இவர்களது பிரதான கோரிக்கையாக இருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழையால், விளைநிலங்களில் நீர் தேங்கி, நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததே இந்த நிலைக்கு காரணம் என அவர்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம் அருகே விளைநிலங்களையும், வீடுகளையும் வெள்ள நீர் சூழ்ந்தது. 30 ஆண்டுகளாக தங்களது துயரம் தீரவில்லை எனக்கூறும் அப்பகுதி மக்கள், குளத்தின் மறுகால்களை சீரமைத்து ஊருக்குள் நீர் புகுவதை தடுக்க வேண்டும் என்கின்றனர். நெல்லை மாநகரில், டவுன் பகுதியில் ஒவ்வொரு மழையின்போதும் வெள்ளநீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கோடகன் கால்வாய், சுத்தமல்லி கால்வாயில் முறையாக பரமாரிப்பு பணிகள் செய்யப்படாததே தங்கள் இன்னல்களுக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்…

EZHILARASAN D

போராடி தோற்றது இங்கிலாந்து அணி! தொடரை கைப்பற்றியது இந்தியா!!

Halley Karthik

“உசுரு போவும்போது நீ கூட இருந்தா போதும்” – திருமாவிடம் உருகிய தாயார்

Arivazhagan Chinnasamy