ராதா வேம்பு; இந்தியாவின் மூன்றாவது பெண் கோடீஸ்வரர்

1 லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புகளை கொண்டு இந்தியாவின் மூன்றாவது பெண் கோடீஸ்வரராக ராதா வேம்பு திகழ்கிறார். ராதா வேம்பு இந்தியாவின் மிக முக்கியமான பெண் தொழில்முனைவோராக சாதனை படைத்து…

1 லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புகளை கொண்டு இந்தியாவின் மூன்றாவது பெண் கோடீஸ்வரராக ராதா வேம்பு திகழ்கிறார்.

ராதா வேம்பு இந்தியாவின் மிக முக்கியமான பெண் தொழில்முனைவோராக சாதனை படைத்து வருகிறார். அவரது சொத்து மதிப்பு 1 லட்சத்து 29 ஆயிரம் கோடியாகும். ஜோஹோ மெயில் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளரான இவர் ஜோஹோ மெயில் நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ரீதர் வேம்புவின் சகோதரியாவார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஹுரூன் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட  மதிப்புமிக்க  பெண் ஆளுமைகளில்  பட்டியலில் மூன்றாவது இடத்தை ராதா வேம்புவிற்கு வழங்கியுள்ளது.  இந்த பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை  நைகாவின் ஃபால்குனி நாயர் மற்றும் கிரண் மஜும்தார் ஷா ஆகியோர் பிடித்துள்ளனர்.

இதனையும் படியுங்கள் : டெல்லி பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை!

 

பிறப்பு முதல் படிப்பு வரை :

ராதா வேம்பு 1972-ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி சென்னையில் பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு சென்னையில் உள்ள ஐஐடியில் 1997ம் வருடம் தொழில் மேலாண்மை பிரிவில்  இளங்கலை பட்டம் பெற்றார்.

ஜோஹோவை உருவாக்கிய ராதா வேம்பு :

ஐஐடியில் இளங்கலை படித்துக் கொண்டிருக்கும் போதே தனது சகோதரரான ஸ்ரீதர் வேம்புடன் சேர்ந்து ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தை உருவாக்கினார். ஆரம்பத்தில் அவரது நிறுவனம் அட்வெண்ட் என்ற பெயரிலேயே துவங்கப்பட்டது.

ராதா வேம்பு தற்போது “ஜானகி ஹைடெக் அக்ரோ பிரைவேட் லிமிடெட்”  எனும் விவசாயம் சார்ந்த நிறுவனத்தையும் , ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹைலேண்ட் வேலி கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் இயக்குநராகவும் உள்ளார்.

ராதா வேம்பின் சொத்து மதிப்பு :

2022ம் வருடம் ஏப்ரல் மாதத்தின்  நிலவரப்படி ராதா வேம்புவின் நிகர சொத்து மதிப்பு
129 ஆயிரம் கோடி ரூபாயாகும்.  அவரது சொத்துக்களில் பெரும்பகுதி  ஜோஹோ நிறுவனத்தின்  பங்கு மதிப்பு ஆகும். 2021ம் ஆண்டின்  ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட  பணக்காரர்கள் பட்டியலில் ஸ்ரீதர் வேம்பு மற்றும் ராதா வேம்பு உடன் பிறப்புகள்  285 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து  மதிப்புடன் 55-வது இடத்தில் உள்ளனர்.

– யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.