அகரத்து முத்தாலம்மன் கோயில் புரட்டாசி உற்சவ விழா : ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

உசிலம்பட்டி அருகே புகழ்பெற்ற அகரத்து முத்தாலம்மன் கோயிலின் புரட்டாசி பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்தும் முளைப்பாரி எடுத்தும் வேண்டுதல் நிறைவேற்றினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.இராமநாதபுரம் கிராமத்தில்…

உசிலம்பட்டி அருகே புகழ்பெற்ற அகரத்து முத்தாலம்மன் கோயிலின் புரட்டாசி பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்தும் முளைப்பாரி எடுத்தும் வேண்டுதல் நிறைவேற்றினர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.இராமநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற அகரத்து முத்தாலம்மன் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் விழா எடுத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.

இந்த ஆண்டு புரட்டாசி பொங்கல் திருவிழா நேற்றும் இன்றும் நடைபெற்றது முக்கிய நிகழ்வான பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

தொடர்ந்து நூற்றுக்கும் அதிகமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து கோயிலில் வைத்து வழிபாடு செய்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.