மும்முனை ஸ்ரீ சித்து முத்து மாரியம்மன் கோவில் முளைக்கொட்டு திருவிழா
ஆயிரக்கணக்கான பெண்கள் விடிய விடிய கும்மியடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலச்சத்திரம் மும்முனை ஸ்ரீ சித்து முத்து மாரியம்மன் கோவில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் அதனை முன்னிட்டு
இன்று 38-ஆம் ஆண்டு முளைகொட்டு விழா விமர்சையாக நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா
வந்தார் அதனைத் தொடர்ந்து இன்று இரவு வைகை ஆற்றில் அம்மனுக்கு கரகம் எடுத்து
விரதமிருந்த பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து மேலச்சத்திரம் வழியாக
ஓட்டப்பாலம் வரை ஊர்வலமாக வந்து பாரி கொலுவிற்கு வந்தடைந்து முளைப்பாரியை
இறக்கி வைத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
அதன் பின்பு மேலச்சத்திரம், ஓட்டப்பாலம் பகுதியைச் சேர்ந்த 1000ற்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் உற்சாகமாக இரவு முழுவதும் கும்மி அடித்து
முளைப்பாரி திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினர் இந்நிகழ்ச்சியை காண்பதற்கு பரமக்குடி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் நேரடியாக வந்து கண்டு ரசித்தனர்.







