இந்திய விண்வெளித்துறை சார்பில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன -சந்திரயான்- 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல்

இந்திய விண்வெளித்துறை சார்பில், எதிர்காலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக சந்திரயான்- 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார். வீரமுத்துவேல் தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பி.இ மெக்கானிக்கல் படித்தார் இந்நிலையில் அவருக்கு…

இந்திய விண்வெளித்துறை சார்பில், எதிர்காலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக சந்திரயான்- 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார்.

வீரமுத்துவேல் தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பி.இ மெக்கானிக்கல் படித்தார் இந்நிலையில் அவருக்கு நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ள லியோ முத்து உள் விளையாட்டு அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வீர முத்துவேல் கூறுகையில் :

சந்திரயான் விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியது வெறும் தண்ணீரைத் தேடுவதற்காக மட்டுமல்ல என்றும், நிலவிற்கு மனிதர்களை அனுப்புவதற்காகவும் தான் என்றும் கூறினார். விண்வெளி துறையில் இந்தியா முன்னோடி நாடாக உள்ளது என்றும் வீரமுத்துவேல் பெருமிதம் தெரிவித்தார்.

அறிவியல் ஆய்வுகளில் வட இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்
தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றிபெறலாம்
தென்னிந்தியாவில் தொடர்ந்து முயற்சி செய்வதில்லை என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.