மமிதா பைஜு பிறந்தநாள் – ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படக்குழு வாழ்த்து…!

நடிகை மமிதா பைஜுவின் பிறந்தநாளையொட்டி ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள திரைப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நவீன் நூலி படத்தொகுப்பு செய்துள்ளார்.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் கதாநாயகி மமிதா பைஜுவிற்கு இன்று பிறந்த நாள் ஆகும். இதனையொட்டி படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.