புதுக்கோட்டை: 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழை -பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி!

புதுக்கோட்டை மாவட்டதில் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.   பொன்னமராவதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னல்,  காற்றுடன் தொடர்ந்து…

புதுக்கோட்டை மாவட்டதில் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.  

பொன்னமராவதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னல்,  காற்றுடன் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெப்பம் தணிந்தது. இதமான வானிலை நிலவியது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.  சாலையில் மழைநீர் ஆறுபோன்றும், வெள்ளம் போலும் பெருக்கெடுத்து ஓடியது.

தமிழகத்தில் கோடை காலம் நிறைவுற்ற நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையை தாண்டி வெயில் அடிக்க தொடங்கியது.  இதனால் பொதுமக்கள் வெளியே சென்று வர மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னாமராவதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நல்லிரவிலிருந்தே வானில் கருமேகம் சூழ்ந்து குளிர்காற்று வீசத் தொடங்கி, சாரல் மழை பெய்ய தொடங்கியது.

இன்று அதிகாலையில் இருந்து இடிசத்தத்துடன், மின்னல் காற்றுடன் மழை பெய்தது. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ந்த இதமான வானிலை நிலவியது பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.  இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்த கனமழையால்,சாலையில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியது.  சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.  இருப்பினும், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.