நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தின் ரசிகர் காட்சிக்காக கேரளாவில் ரசிகர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் காட்சிகளை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தை தொடர்ந்து இந்த வெற்றிக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தில் LCU இருக்குமா என்பது குறித்து தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் தனது சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசிய லோகேஷ் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் திரையரங்குகளில் திரையிடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு சில கட்டுப்பாடுகளுடன் அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை திரையரங்குகளில் சிறப்பு காட்சி உட்பட தினசரி 5 காட்சிகள் திரையிடவும், காலை 9.00 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 1.30 மணிக்குள் 5 காட்சிகளை முடிக்க வேண்டும் எனவும் ஆணைகள் வெளியிட்டுள்ளது. இதனால், காலை 4 மணிக்கு ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரசிகர்களால் வைக்கப்பட்ட பேனர்கள்#TamilCinema | #Leo | #LeoFDFS | #LeoFilm | #LeofromOct19 | #ThalapathyVijay | #ActorVijay | #Thalapathy | #Baner | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/Hr5OKzgmdE
— News7 Tamil (@news7tamil) October 16, 2023
ஆனால் கேரளாவில் லியோ படத்துக்கு ரசிகர்கள் காட்சி திரையிடப்படவுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் இருந்து விஜய் ரசிகர்கள் கேரளாவில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் லியோ வெளியாகவுள்ள பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட் விற்றுத் தீர்ந்த நிலையில், சிறப்புக் காட்சிகளுக்கும் கூடுதல் திரையரங்குகளில் வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
அதுமட்டுமின்றி, தமிழ்நாடு எல்லையில் உள்ள கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் ரசிகர்களின் காட்சிகளுக்கான டிக்கெட் பெற கூட்டம் அலைமோதி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.







