முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

புதுச்சேரியில் 9-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்! கல்வித்துறை அறிவிப்பு…

புதுச்சேரி அரசு பள்ளிகளில் 2023-24ம் கல்வி ஆண்டில் CBSE பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதால், 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரிக்கு என்று தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் அரசு, CBSE பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி 2014-15-ஆம் கல்வி ஆண்டு முதல் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிற்கு CBSE பாடத்திட் டம் அமல்படுத்தப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை தொடர்ந்து கடந்த 2018-19-ம் கல்வி ஆண்டில் 5-ம் வகுப்பு வரை மாட்டும் CBSE பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. 6-ம் வகுப்பில் இருந்து சிபிஎஸ்இ பாடத் திட்டம் விரிவாக்கப்படவில்லை. அதனை இந்த கல்வி ஆண்டில் இருந்து 6-ஆம் வகுப்பில் CBSE பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான அனுமதி கேட்டு, புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு விண்ணப்பித்திருந்தது.

இந்த நிலையில், புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் 2023-24ம் கல்வி ஆண்டில் CBSE பாடத்திட்டத்தை அமல்படுத்தப்படுவதாக புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், புதுச்சேரி அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு 9ஆம் வகுப்புவரை CBSE பாடத்திட்டத்தினை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து விண்ணப்பங்களையும் அரசிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிரதமர் மோடியின் தாயார் மறைவு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Jayasheeba

‘நிர்வாகத் திறமையற்ற அரசாக திமுக அரசு உள்ளது’ – இபிஎஸ்

Arivazhagan Chinnasamy

இந்தியா, ஆஸ்திரேலியா உறவு குவாட் உச்சி மாநாட்டிலும் தொடரும்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Arivazhagan Chinnasamy