புதுச்சேரியில் 5 மணி நிலவரப்படி 77. 82% வாக்குப்பதிவு!

புதுச்சேரியில் வாக்குப்பதிவு மாலை 5 மணி நிலவரப்படி 77. 82 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் உள்ள…

புதுச்சேரியில் வாக்குப்பதிவு மாலை 5 மணி நிலவரப்படி 77. 82 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மொத்தம் 486 வேட்புமனுக்கள் பெறப்பட்டிருந்த நிலையில் இறுதியாக 324 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புதுச்சேரி முழுவதும் வாக்குப்பதிவிற்காக 635 இடங்களில் ஆயிரத்து 558 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுவரை 12 ஆயிரத்து 693 தபால் வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 77. 82 சதவீதம் வாக்குகள் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.