இந்தோனேஷியாவில் புயல் பாதிப்பால் 113 பேர் பலி!

இந்தோனேஷியாவில் புயல், மழையால் 113 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு திமோர் மற்றும் தென்கிழக்கு இந்தோனேஷியா பகுதிகளில் செரோஜா என்ற புயல் தாக்கியதில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. தவிர ஆறுகளில்…

இந்தோனேஷியாவில் புயல், மழையால் 113 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு திமோர் மற்றும் தென்கிழக்கு இந்தோனேஷியா பகுதிகளில் செரோஜா என்ற புயல் தாக்கியதில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. தவிர ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. நிலச்சரிவு மற்றும் மழையால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 113 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரவில் புயல் தாக்கியதன் காரணமாக இரவு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் திடீரென நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.சூறாவளியால் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களிலிருந்து, கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் மட்டும் 84 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கிழக்கு திமோரில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உறுதிப்படுத்தப்பட்ட பலி எண்ணிக்கை தற்போது 113 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 100க்கு மேல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மீட்புப் படையினர் காணாமல் போனவர்களை ரப்பர் படகுகள் மூலம் தேடி வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். சூறாவளியயை தொடர்ந்து எஞ்சியிருக்கும் குப்பைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறதாக அதிகாரிகள் கூறினர்.

மேலும், புயல் ஆறு மீட்டர், 20 அடி உயரத்தில் கடல் அலைகளைத் தூண்டுவதால் அடுத்த நாளில் மழை பெய்யக்கூடும் என இந்தோனேசியாவின் பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.