கொரோனாவை வென்ற புதுச்சேரி

கொரோனா தொற்று பரவத் தொடங்கி நாடு முழுவதும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், புதுச்சேரியில் இன்று 2வது நாளாக யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. கொரோனா மூன்றாம் அலை பரவத் தொடங்கி…

கொரோனா தொற்று பரவத் தொடங்கி நாடு முழுவதும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், புதுச்சேரியில் இன்று 2வது நாளாக யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

கொரோனா மூன்றாம் அலை பரவத் தொடங்கி தற்போது படிப்படியாக குறைந்து நாட்டின் பல இடங்களில் பூஜ்ஜிய இறப்பு எண்ணிக்கை பதிவாக தொடங்கியுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக அங்கு யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 463 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவில் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.

புதுச்சேரியில் தொடர்ந்து 2-வது நாளாக புதிய பாதிப்புகள் இல்லையென்றாலும், 11 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் இன்று 2 பேர் குணமடைந்துள்ளனர்.

தடுப்பூசி பொருத்தவரை நேற்று முதல் தவணை தடுப்பூசியை 1, 368 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1, 673 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 115 பேரும் செலுத்திக்கொண்டனர். மொத்தமாக இதுவரை 16 லட்சத்து 16 ஆயிரத்து 148 பேர் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.