ராகுல் காந்திக்கு முதலமைச்சர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து…!

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்திக்கு இன்று பிறந்தாள் ஆகும். இதனை தொடர்ந்து பல்வேறு கட்சினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ராகுல் காந்திக்கு தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்தியத் திருநாட்டின் மாண்புகளைக் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன். சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.