தமிழ் நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் நேற்று (ஜீன். 18) தொடங்கியது. முதல் நாளான நேற்று ஆளுநர் அர்லேக்கர் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று (ஜூன்19) சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று கூடியுள்ளது.
அதன் படி இன்று அவை முன்னாள் உறுப்பினர்கள் சி.ராமசுவாமி, தா.வீராசாமி, சி.சுவாமிநாதன். அ.க.ஆறுமுகம், பெ.கண்ணன், அ.நாஞ்சில் முருகேசன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து சிபிஐ கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, சட்டமன்ற முன்னாள் செயலாளர் சி.கு.ராமசாமி, பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, கே.ராஜன், பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டன.




