திருப்பூரில் தடையை மீறி போராட்டம் – அண்ணாமலை கைது!

திருப்பூரில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் பங்கேற்ற பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் குப்பை பிரச்சனையை முறையாக தீர்க்காமல் அலட்சியம் காட்டியதாக மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக சார்பில் குமரன் சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட முயன்றதால் போராட்ட வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தடையை மீறி ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குப்பையை மறுசுழற்சி செய்வதில்லை, குப்பையை அதிகமாக சேர்த்தால் தான் அதிக ஊழல் செய்ய முடியும். வளர்ந்து விட்டோம் என கூறி நம் ஊரை குப்பை மேடாக மாற்றி உள்ளனர். அனைத்து விதிமுறைகளுக்கு ஒப்புக் கொண்டும் அனுமதி மறுத்துள்ளனர். ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களை கைது செய்கிறீர்கள் என்று பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.