திருவண்ணாமலை, குருமப்பட்டியில் பசுமை மரங்களை வெட்டி, கட்ட இருக்கும் சமையலறையை வேறு இடத்தில் மாற்ற வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் குருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள சமையலறை புதுப்பிப்பதற்காக கேட்ட ஒப்பந்தத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே இருந்த இடத்தில் சமையலறை கட்டாமல் புதிய இடமாக வேறு இடத்தை தேர்வு செய்தார் ஒப்பந்ததாரர் தாமோதரன்.
அந்த புதிய இடம், பள்ளி வளாகத்தில் வளர்க்கப்பட்டு வரும் பச்சை மரங்களை கொண்ட இடம், எனவே அவற்றை வெட்டுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்று அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி
மரங்கன்றுகளை நட்டு பாதுகாப்பாக வளர்கப்டுகின்றன. ஆகையால் நடப்பட்ட பச்சை மரங்களை வெட்டி விட்டு அந்த இடத்தில் சமையலறை கட்ட பொதுமக்கள் பெரும் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பள்ளியில் உள்ள பசுமை யான மரங்களை வெட்டக்கூடாது எனவும் அதற்கு மாறாக பழைய இடத்திலேயே சமையலறை அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சு வார்த்தை நடத்தி பொதுமக்களை அனுப்பி வைத்தார்
-M. ஸ்ரீ மரகதம்







