கரூரில் வீடுவீடாக சென்று நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கிய கவுன்சிலரின் செயல் அப் பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
கரூர் மாநகராட்சி 48 வார்டுகளை கொண்டது. அதில் 36 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வசுமதி பிரபு என்பவர் வெற்றி பெற்றார். கவுன்சிலராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, தனது பகுதியில் வாக்காளர்கள் வைத்த கோரிக்கைகளான சாலை வசதி மின்சார வசதி, கழிவறை வசதி மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என்னவெல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை அச்சடித்து துண்டு பிரசுரமாக வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு விநியோகித்தார்.
மேலும், வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து, அவர் மேற்கொண்டு பொதுமக்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாகவும் வாக்குறுதி கொடுத்தார் .இந்த வித்தியாசமான முயற்சி அப்பகுதி மக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
-கா.ரூபி.