கால்பந்து வீராங்கனை நினைவாக பிரியா நினைவு சுழற் கோப்பை -அமைச்சர் மெய்யநாதன்

மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை பெயரை பல நூறு ஆண்டுகள் நினைவிருக்கும் வகையில் இந்த போட்டியானது நடத்தப்படுகிறது என அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.    சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மறைந்த கால்பந்து வீராங்கனை…

மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை பெயரை பல நூறு ஆண்டுகள் நினைவிருக்கும் வகையில் இந்த போட்டியானது நடத்தப்படுகிறது என அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.   

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மறைந்த கால்பந்து வீராங்கனை பிரியா நினைவு சுழற் கோப்பை மகளிர் கால்பந்தாட்ட போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் துவங்கி வைத்தனர் அதனை தொடர்ந்து

அப்போது  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்ய நாதன், மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை நினைவு போற்றும் வகையில் பெரிய நினைவு கால்பந்தாட்ட போட்டி இன்று துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

அத்துடன், ஐந்து மாநிலத்தைச் சேர்ந்த 21 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர்.
மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை பெயரை பல நூறு ஆண்டுகள் நினைவிருக்கும் வகையில் இந்த போட்டியானது நடத்தப்படுகிறது என பேசினார்.

மேலும், தமிழகத்தில்  முதல்முறையாகக் கால்பந்தாட்ட நினைவு போட்டியைத் துவக்கி வைத்த ஒரே அமைச்சர் சேகர்பாபு. மாணவியின் நினைவுகளைக் கொண்டு சேர்க்கும் வகையில் அரும்பணி ஆற்றி இருக்கும் அமைச்சர் சேகரை பாபு அவர்களுக்கு முதலமைச்சர் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பாக நன்றியை தெரிவிப்பதாக  தெரிவித்தார்.

அத்துடன், 2018 இல் தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு அவர்கள் ஆவணங்கள் பெறுவதில் காலதாமதமானது. இதனை அடுத்து விரைவில் அவர்களுக்கான பரிசுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

மேலும், ஆசிய கடற்படை போட்டி தமிழகத்தில் நடத்துவதற்கான முயற்சிகளை முதலமைச்சர் எடுத்து வருகிறார். இந்த போட்டியை நடத்துவதற்குப் பிரதமர்க்கும் முதலமைச்சர் கடிதம் எழுதி இருக்கிறார். அனுமதி பெற்றவுடன் முதலமைச்சர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என  அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.