குற்றால அருவியில் பயணிகள் குளிக்க தடை; ஐயப்ப பக்தர்கள்  ஏமாற்றம் 

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில்  பெய்து வரும் கனமழை காரனமாக குற்றால அருவியில் குளிப்பதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.  தென்காசி மாவட்டம் மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலத்தைப் பொறுத்தவரை ஆண்டு முழுவதும் அருவிகளில் தண்ணீர் விழுந்தாலும் குறிப்பாக…

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில்  பெய்து வரும் கனமழை காரனமாக குற்றால அருவியில் குளிப்பதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. 
தென்காசி மாவட்டம் மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலத்தைப் பொறுத்தவரை ஆண்டு
முழுவதும் அருவிகளில் தண்ணீர் விழுந்தாலும் குறிப்பாக ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய
மூன்று மாதங்கள் மட்டுமே சீசன் காலமாகும்.  இரண்டாவது கட்ட சீசன் என்பது நவம்பர்
மாதம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிவித்துச் சென்றுவரும் பக்தர்கள் அதிக  அளவில் குற்றாலத்துக்கு வந்து செல்வதால் இரண்டாவது சீசன் என்பதும் களைக்கட்டும்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில்
தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து இருந்துவருகிறது.  இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை என்பதும் அதிகளவு இருந்தது.
இந்த நிலையில் நேற்று பல்வேறு பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்
பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி
மெயின் அருவி பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டுள்ளது.  இந்த வெள்ளப்பெருக்கானது நள்ளிரவில் 2 மணி அளவில் காட்டாற்று
வெள்ளம் போல் ஏற்பட்டு உள்ளது தண்ணீருடன் சிறிய சிறிய கற்கள் விழுந்துள்ளது.
 எனவே அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி மறுத்துள்ளனர். இந்த நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகையும் ஐயப்ப பக்தர்கள் வருகையும் தொடர்ந்து அதிக அளவில் காணப்பட்டது.
இந்த நிலையில் அருவிகளில் குளிக்க  முடியாததால் அறிவிக்கரை முன்பாக உள்ள பாலத்தில் இன்று அருவியை ரசித்தவாறு  தங்களது செல்போனில் செல்பி எடுத்துச் சென்ற வண்ணம் உள்ளனர். தொடர்ந்து  மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு பெய்து வருவதால் இன்று முழுவதும் சுற்றுலா  பயணிகள் குளிப்பதற்குத் தடை தொடரும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.