தனியார் கல்லூரி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கீழக்கரையை சேர்ந்த தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ‘தெற்கு மல்லல்’ கிராமத்தை சேர்ந்த இரு சக்கர வாகனத்தில் வந்த மனோஜ் மற்றும் பாலா ஆகிய இரண்டு இளைஞர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இருவரின் உடல்களையும் மீட்ட ஏர்வாடி காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஏர்வாடி பகுதியில் நடைபெற்று வரும் பாலப்பணியில் எந்த விதமான முன் அறிவிப்பு பலகையும் இல்லாததால் இது போன்ற கோர விபத்துக்கள் அடிக்கடி இந்த பகுதிகள் நிகழ்ந்து வருவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.
இந்த பாலம் வழியாக வரும் பொழுது விபத்து ஏற்பட்டு இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் ஏர்வாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஏர்வாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.







